மலேசியா: அன்வர் கைது-ஜாமீனில் விடுதலை
கோலாலம்பூர்: தனது உதவியாளருடன் கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட மலேசிய எதிர்க்கட்சியான கெடிலான் ரக்காயத் கட்சியின் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான இப்ராகிம் அன்வர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
மலேசிய முன்னாள் பிரதமரான இப்ராகிம் அன்வரிடம் உதவியாளராக இருந்தவர் முகம்மது சைபுல் புகாரி அஸ்லன் (23). இவர் ஜூன் 28ம் தேதி போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில் ஜூன் 26ம் தேதி அன்வர் தன்னிடம் கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கை மேற்கொண்டதாக கூறியிருந்தார்.
இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், நேற்று அன்வரை கைது செய்தனர். அதன் பின்னர் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து அன்வரின் வழக்கறிஞர் சங்கர நாயர் கூறுகையில், மீண்டும் அன்வரை கைது செய்ய மாட்டோம் என போலீஸார் உறுதியளித்துள்ளனர். எனது கட்சிக்காரர் மீது போலீஸார் குற்றச்சாட்டு எதையும் பதிவு செய்யவில்லை என்றார்.
இதேபோன்ற ஓரினச் சேர்க்கை புகாரில் சிக்கிய அன்வர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பின்னர் அன்வருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டு அவரை கோர்ட் விடுதலை செய்தது.
மலேசிய ஆளுங்கட்சிக்கு எதிராக தீவிரமாக போராடி வருபவர் அன்வர். கடந்த பொதுத் தேர்தலில் அவரது கட்சிக்கு பெரும் வெற்றிகிடைத்தது என்பதும் நினைவிருக்கலாம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications