மர்ம மனிதனை துரத்திய மக்கள் - நள்ளிரவில் சென்னையில் பரபரப்பு!
சென்னை: சைக்கோ மனிதன் என சந்தேகப்படும் ஒரு மர்ம நபரை நள்ளிரவில் சென்னை கே.கே.நகர் பகுதி மக்கள் துரத்தியதால் விடிய விடிய அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
சென்னை வடபழனி, கே.கே.நகர், அசோக்நகர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில்ஒரு கொலையில் மட்டும்தான் துப்பு துலங்கியுள்ளது. மற்ற ஐந்து கொலைகளுக்கும் யார் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை.
கொலையானவர்களில் பெரும்பான்மையானவர்கள் வீட்டுக் காவலாளிகள் என்பதால் குறி வைத்து கொல்வது சைக்கோ மனிதனாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் கே.கே. நகர் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கருப்பு உடையுடன், முகத்தில் ரத்தக் காயத்துடன் ஒரு மர்ம நபரைப் பார்த்த அப்பகுதியினர், அவர் சைக்கோ மனிதனாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் கம்பு, கட்டைகளுடன் திரண்டனர். அந்த மர்ம நரபரை துரத்தினர். அவர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடினார். மேலும், வித்தியாசமான முறையில், கூட்டத்தைப் பார்த்து மிரட்டலாக உருமியதால் மக்கள் பீதியடைந்து இவர் நிச்சயம் சைக்கோதான் என்ற முடிவுக்கு வந்து துணிச்சலுடன் அவரைத்துரத்தினர்.
ஆனால் அந்த நபர் மக்களிடம் பிடிபடாமல் ஒவ்வொரு கட்டடமாக தாண்டி குதித்து ஓடியுள்ளார். ஆனாலும் விடாமல் பொதுமக்கள் அவரைத் துரத்தினர்.
இதனால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்பாகி விட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கம்பு, கட்டைகளுடன் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அரிந்ததும் கே.கே.நகர் போலீஸார் விரைந்து வந்து அந்த மர்ம நபரைப் பிடித்து ஜீப்பில் ஏற்றினர்.
இதையடுத்து ஜீப்பை சூழ்ந்த மக்கள், அந்த நபரை அடிக்க முயன்றனர். அவர்களிடமிருந்து அந்த நபரைக் காக்க பெரும்பாடு பட்ட போலீஸார், ஒரு வழியாக பொதுமக்களை விரட்டி விட்டு ஜீப்புடன் கிளம்பினர்.
இந்த களேபரத்தில் அந்த சாலை வழியாக வந்த சில வாகனங்கள் மீதும் மக்கள் தாக்குதல் நடத்தினர்.
மர்ம நபர் சிக்கியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அந்தப் பகுதியே விடிய விடிய களேபரமாக இருந்தது. பிடிபட்ட நபர் யார் என்பது குறித்து போலீஸார் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. அவரிடம் விசாரணை நடத்திய பிறகே உண்மை தெரிய வரும் எனத் தெரிகிறது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications