தமிழகத்தில் ஜூலை 25 முதல் ஆக. 10 வரை சிபிஎம்-சிபிஐ பிரச்சாரம்
சென்னை: நாட்டின் நலனை பாதிக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராகவும், மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டாக தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கத்தை நடத்துகின்றன.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
நமது நாட்டின் அடிப்படை நலனுக்கு விரோதமான முறையிலும், இடது சாரி கட்சிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு புறம்பான முறையிலும், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடை முறைப்படுத்த முனைந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நடவடிக்கையை எதிர்த்து நாடு தழுவிய பிரச்சார இயக்கங்களை நடத்துவதென இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மேலும், இந்தியமக் களை கடுமையாக பாதித்துள்ளதும், மக்கள் வாழ்க் கையை சீரழித்து வருவதுமான விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது பற்றி, மத்திய அரசு கவலைப்படவே இல்லை. விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, இடதுசாரி கட்சிகள் முன்வைத்த ஆலோசனைகளை மத்திய அரசு முற்றிலுமாக புறக்கணித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தின் பாதக விளைவுகளை விளக்கியும், விலை உயர்வை கட்டுப்படுத்த மறுத்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், நாடு தழுவிய முறையில் நடைபெற்று வரும் பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஜூலை 25 லிருந்து ஆகஸ்ட் 10க்குள் தமிழகத்தின் பிரதான 10 மையங்களில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்கள் நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், ஈரோடு,வேலூர், திருச்சி, திருவாரூர் ஆகியமையங் களில் நடைபெறும் இப் பொதுக்கூட்டங்களில் அகில இந்திய - மாநில தலைவர்கள் பங்கேற்பார்கள். பங்கேற்கும் தலைவர்கள் பற்றிய விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். பொதுக்கூட்டங்கள் நடை பெறுவதையொட்டி, அந்தந்த மையங்களுக்கு அருகாமையிலுள்ள மாவட்டங்களில் விரிவான பிரச்சார இயக்கங்கள் மேற்கொள்ளப்படும்.
நாட்டு நலன் காக்க, இடதுசாரி கட்சிகள் மேற் கொண்டுள்ள இந்த பிரச் சார இயக்கத்திற்கு முழு ஆதரவளிக்க வேண்டுமென அனைத்துப் பகுதி மக்களையும் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications