எம்பிக்களிடம் பேரம் நடத்தவில்லை: ப.சிதம்பரம் மறுப்பு
டெல்லி: மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்பிக்களிடம் பேரம் பேசப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கூறுவது ஆதாரமற்ற புகார். இது கண்டிக்கத்தக்கது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களவையில் வரும் 22 ம் தேதி நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெற்றி பெறும் என்ற திடமான நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசின் வெற்றியும் தோல்வியும் தொழிலதிபர்களின் கையில் இருக்கிறது என்று கூறுவது ஆதாரமற்றது.
தொழிலதிபர்களின் தலையீடு இதில் இல்லை என்பதே உண்மை. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.
ஆட்சியை காப்பாற்ற ரூ.25 கோடி கொடுத்து எம்பிக்களை வாங்குவதாகவும், அதற்காக தொழில் நிறுவனங்களின் உதவியை பெறுவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.பி.பரதன் கூறும் புகார் கண்டிக்கத்தக்கது.
அரசியலில் நிதானம், பொறுமை என்பதே இல்லாமல் போய்விட்டது. புகாரை மிகைப்படுத்தி கூறுவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications