அவசர சிகிச்சைப் பிரிவில் மன்மோகன் அரசு: அத்வானி
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் போய் நீண்ட நாட்களாகிறது என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானி விமர்சித்துள்ளார்.
டெல்லியில், இந்திய வர்த்தக சபையின் மூத்த குடிமக்கள் கூட்டத்தில் அத்வானி இன்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் குழப்பம் மற்றும் நெருக்கடிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே பொறுப்பாகும்.
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆபத்தான நிலையில் ஐசியுவில் நீண்ட நாட்களாக உள்ளது. அது பிழைக்குமா, பிழைக்காதா என்பது வரும் 22ம் தேதி இரவு தெரிந்து விடும். நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு இந்த அரசின் எதிர்காலம் என்ன என்பது தெரிந்துவிடும்.
மன்மோகன் சிங் அரசு சிக்கலை (அணு ஒப்பந்தம்) தாங்களாகவே உருவாக்கிக் கொண்டனர். இப்போது அவர்களே அதில் மூழ்கி தவிக்கின்றனர்.
எனது பேச்சில் அரசியலை தவிர்க்க நினைக்கிறேன். ஏனென்றால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பற்றி நான் பேச நினைப்பதை நாளை நான் நாடாளுமன்றத்தில் பேசப் போகிறேன் என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications