ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட வாலிபர் கவலைக்கிடம்
டெல்லி: டிவி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தூரைச் சேர்ந்தவர் அன்சார் கான் (22). வெளிநாடுகளில் ஒளிபரப்படும் அச்சம் தொடர்பான நிகழ்ச்சிகளை போல இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி நிறுவனம் ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோருக்கு ரொக்க பரிசும் வழங்கி வருகிறது.
இந்தூரில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டது. நீருக்குள் எவ்வளவு நேரம் மூழ்கி இருக்க முடியும் என்பதுதான் நிகழ்ச்சியின் சவால். எத்தனை நேரம் நீரில் மூழ்கி இருக்க முடியும் என்பதை பொருத்து பரிசு வழங்க போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான படப்பிடிப்பும் தொடங்கியது.
போட்டியில் அன்சார் கானும் பங்கேற்றார். நீருக்கடியில் 3 நிமிடத்துக்கும் மேலாக அவர் மூச்சை பிடித்தபடி இருந்தார். 5 நிமிடமாகியும் அன்சார் வெளியே வராததால் சந்தேகமடைந்த போட்டிக்குழுவினர் நீருக்குள் இருந்த அன்சாரை தூக்கி வெளியே கொண்டு வந்தனர். அவர் நினைவிழந்து கிடப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அன்சார் சிகிச்சை பெற்று வருகிறார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்து டிவி நிறுவனம் போட்டிக்காக முறைப்படி அனுமதி பெறவில்லை. இதைத் தொடர்ந்து டிவி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications