காங் கூட்டணிக்கு திரும்பும் கெளடா, அஜீத்சிங்?
டெல்லி: எதிர் அணிக்கு வெற்றி வாய்ப்பு குறைந்து விட்டதால், தேவெ கெளடா மற்றும் அஜீத்சிங் ஆகியோர் 3வது அணியிலிருந்து தாவி மறுபடியும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் தெலுங்கானா கட்சியும் தாவக் கூடும் எனவும் ெதரிகிறது.
நம்பிக்கை தீர்மானத்தின் மீது இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் திடீர் திருப்பங்கள் அரங்கேறி அரசுத் தரப்பை குஷியாக்கி வருகின்றன.
முக்கிய திருப்பமாக தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம், அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் ஆகிய கட்சிகள், அரசுக்கு ஆதரவாக திரும்பக் கூடும் என்பது. கூடவே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் இவர்களுடன் சேர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக திரும்பும் எனத் தெரிகிறது.
நம்பிக்ைக வாக்கெடுப்பில் அரசு வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதே இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
அஜீத் சிங்கும், கெளடாவும் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் கெளடா, சோனியா காந்தியை சந்திக்க நேரம் கேட்டுள்ளாராம். இன்று அவர் சோனியாவை சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில்,உடல் நலம் பாதிக்கப்பட்டு நாசிக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஜக எம்.பி. சவான் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டார். அதேபோல தர்மேந்திராவும் லண்டனிலிருந்து திரும்பியுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் இணைந்து இவர்கள் 3 பேரும் லோக்சபா லாபியில் இருந்தபடி
வாக்களிப்பார்கள்.
இன்னொரு பாஜக எம்.பியான மகேஷ் கனோடியாவை மும்பை மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்து வாக்களிக்கவும் பாஜக முயன்று வருகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெல்லும்: பத்திரிக்கை ஆசிரியர்கள்
இதற்கிடையே சிஎன்என் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்லும் என்று நாட்டின் முன்னணி பத்திரிக்ைக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவாதம் மற்றும் கருத்துக் கணிப்பில் 25 பத்திரிக்ைக ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பான விவாதத்தில் மூத்த பத்திரிக்கையாளர்களான எம்.ஜே. அக்பர், தி பயனீர் ஆசிரியர் சந்தன் மித்ரா, ஐபிஎன் லோக்மாத் ஆசிரியர் நிகில் வாக்லே, மெயில் டுடோ கமென்ட்ஸ் ஆசிரியர் மனோஜ் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்களில் பெரும்பாலானோர் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்லும் என்ற கருத்தை வெளிப்படுத்தினர்.
மேலும், ஹைட் சட்டத்தால் இந்தியாவுக்கு பாதகம் ஏதும் ஏற்பாடது என்பதையும் விளக்கினர்.
நிகில் வாக்லே கூறுகையில்,அரசியல் சந்தர்ப்பவாதம்தான் தற்போது மேலோங்கி நிற்கிறது. உண்மை நிலவரத்ைத யாரும் சரிவர கவனிக்காமல் உள்ளனர்.
பாஜகவுக்கு இந்த ஒப்பந்தத்தில் எந்தவித முரண்பாடும் இல்லை. உண்மையில் பாஜக ஆட்சியில் இருந்திருந்தால் இதை விட வேகமாக ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருக்கும்.
நமது அரசு அணு சக்தி ஒப்பந்தத்ைதப் பொருத்தவரை மிகவும் வெளிப்படையாக இருக்கிறது. இதுவரை இருந்த அரசுகளை விட இப்போதைய ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு மிகவும் வெளிப்படையாக உள்ளது.
ஒப்பந்தம் தொடர்பான பல தகவல்களை அது வெளியிட்டுள்ளது. இது இதுவரை இல்லாத ஒரு முக்கிய அம்சம்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை ஹைட் சட்டம் பாதிக்கும் என்று அக்பர் கூறுவதை ஏற்க முடியாது. 123 ஒப்பந்தத்தின் அடிப்படையிலானதுதான் ஹைட் சட்டம். அனைவருக்கும் 123 ஒப்பந்தம் குறித்து பிரச்சினை இல்லை. அப்படி இருக்கையில், ஹைட் சட்டத்தால் நமக்கு என்ன பிரச்சினை வந்து விடப் போகிறது என்றார்.












Click it and Unblock the Notifications