ஹைட் ஆக்ட்டால் நமக்கு பாதிப்பில்லை-ப.சிதம்பரம்

மக்களவையில் நம்பிக்கை தீ்ர்மானத்தின் மீது அவர் பேசுகையில்,
அணு சக்தியில் சீனா மிக அதிக அளவி்ல் முதலீடுகளை செய்து வருகிறது. வரும் 2020ம் ஆண்டில் அந்த நாட்டின் அணு மின் சக்தி உற்பத்தி 4 மடங்காக அதிகரிக்கவுள்ளது.
ஆனால், இந்த நாட்டில் சில சக்திகள் உள்ளன. அவை சீனாவுக்கு இணையாக இந்தியாவும் வளர்ந்து விடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டுகின்றன.
இவ்வாறு சிதம்பரம் பேசியபோது கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்கள் எழுந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அமைதிப்படுத்தினார்.
தொடர்ந்து சிதம்பரம் பேசுகையில், நான் சீனாவைப் பார்த்து பொறாமைப்படவில்லை. நாமும் அவர்களைப் போல வளர வேண்டும், பொருளாதாரரீதியில் அவர்களை வெல்ல வேண்டும் என்பது தான் என் கனவு.
நாம் சீனாவைத் தவிர பிற நாடுகளுடன் நம்மை ஒப்பிடக் கூடாது. மக்கள் தொகையில் நமக்கு இணையான நாடான அவர்களுடன் தான் ஒப்பிட்டாக வேண்டும். இதில் தவறில்லை என்றார்.
அப்போதும் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய சிதம்பரம், அணு ஒப்பந்தத்தில் இடதுசாரிகளின் நிலை என்ன. யாருக்காவது தெளிவாகத் தெரியுமா? என்று சிதம்பரம் தாக்க, மீண்டும் இடதுசாரி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து கூச்சலிட்டனர்.
சிதம்பரம் தொடர்கையில், இந்த அரசைக் குறை கூறுகிறது பாஜக. ஆனால், விவசாயத்துறைக்கு, கிராமப்புற வளர்ச்சிக்கு நாங்கள் செய்த உதவிகளைப் போல யாரும் செய்ததில்லை. ஆண்டுக்கு 100 நாள் குறைந்தபட்ச வேலை தரும ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை கொண்டு வந்தவர்கள் நாங்கள். விவசாயக் கடன்களை ரத்து செய்தவர்கள் நாங்கள். இதைப் போல திட்டங்களை பாஜக ஆட்சி யோசித்துப் பார்த்ததாவது உண்டா?
சுதந்திர இந்தியாவில், கடந்த நான்கு ஆண்டுகளில் செய்யப்பட்ட மக்கள் நலத் திட்டங்களைப் போல இதற்கு முன்பு எந்த அரசிலும் நிறைவேற்றப்படவில்லை.
பாஜக கூட்டணிக்கு அணு ஆயுத கொள்கை தான் இருந்தது. அணு சக்தி மின் திட்டங்களைப் பற்றி அவர்கள் கவலையேபடவில்லை.
இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை 123 ஒப்பந்தம் மட்டுமே நம்மை கட்டுப்படுத்தும். ஹைட் ஆக்ட் உள்ளிட்ட வேறு எந்த சட்டமும் நம்மை கட்டுப்படுத்தாது.
மேலும் இந்த ஒப்பந்த விவகாரத்தில் நாங்கள் ஒளிவு-மறைவாக செயல்படவே இல்லை. சர்வதேச அணு சக்தி ஏஜென்சிக்கு பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான வரைவு ஒப்பந்தம் சுற்றுக்கு விடப்பட்ட அதே சமயத்தில்தான் இந்தியாவிலும் அது வெளியிடப்பட்டது. இதில் அரசு ஒளிவு மறைவாக நடந்து கொண்டதாக கூறுவதில் அர்த்தம் இல்லை.
உலக நாடுகள் எல்லாம் வேகமாக வளர்ந்து வருகின்றன. அணு சக்தியின் உதவியுடன் இன்னும் வேகமாக வளரப் போகின்றன. ஆனால் இந்தியா மட்டும் மற்ற நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டுமா என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.
சிதம்பரம் பேசும்போது இடதுசாரி உறுப்பினர்கள் கடும் கோபத்துடன் எதிர்த்து குரல் கொடுத்தபடி இருந்தனர். அவர்களை அமருமாறு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பலமுறை கூறியும் அமளி அடங்கவில்லை.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல், ப.சிதம்பரம் தனது பேச்சை தொடர்ந்து பேசி முடித்தார். சிதம்பரத்தின் பேச்சுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் பலமாக மேசைகளைத் தட்டி ஆராவாரம் செய்தனர்.
குறிப்பாக மிக நிதானமாக, புள்ளி விவரங்களோடு பேசிய சிதம்பரத்தின் பேச்சால் சோனியா காந்தி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அவரும் மேஜையைத் தட்டி சிதம்பரத்தின் பேச்சை வரவேற்றார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு












Click it and Unblock the Notifications