சேது பதில் மனு: புண்ணாக போகிறது மத்திய அரசு-பாஜக
டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் மீதான தடையை நீக்கக் கோரி பதில் மனு தாக்கல் செய்வதன் மூலம் மத்திய அரசு மோசமான விளைவுகளை சந்திக்க உள்ளது என்று பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார்.
சேது சமுத்திர திட்டத்துக்கான தடையை நீக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மனு தாக்கல் செய்யவுள்ளது.
இதுகுறித்து வெங்கையா நாயுடு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில்,
உச்சநீதிமன்றத்தில் உள்ள பிரச்னைக்குரிய சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு மீண்டும் கையில் எடுத்திருப்பது அவர்களுக்கே காயத்தை ஏற்படுத்தப் போகிறது. இதை பாஜ சீரியஸாக எச்சரிக்கிறது.
தற்போதுள்ள நெருக்கடியான நிலையில் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள கூட்டணியில் உள்ள திமுகவின் வற்புறுத்தலுக்கு ஐக்கிய முற்போக்கு அரசு பலியாகியிருப்பது தெரிகிறது.
மத்திய அரசின் கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கிறது திமுக. தற்போதுள்ள இக்கட்டான சூழலில் திமுகவை திருப்திபடுத்த மத்திய அரசு சேது திட்டத்தின் மீதான தடையை நீக்கக் கோரி பதில் மனு தாக்கல் செய்கிறது.
சேது திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது என்பது இந்த அரசுக்கு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். சேது திட்டம் மீது அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டால் பாஜக அரசியல் ரீதியாக எதிர்த்து போராடும் என்று எச்சரிக்கிறேன் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications