இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நேபாள ஜனாதிபதி ஆனார்!

நேபாள நாட்டின் முதல் ஜனாதிபதியை தேர்வு செய்ய அங்கு தேர்தல் நடந்தது. இதில் நேபாள காங்கிரஸ் கட்சி சார்பில் ராம் பரன் யாதவ் நிறுத்தப்பட்டார். மாவோயிஸ்ட் கட்சி சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.
இந்தத் தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக முதலில் அறிவித்திருந்த மாதேஸி கட்சி திடீரென பின்வாங்கி, ேநபாள காங்கிரஸ் வேட்பாளரான யாதவுக்கு வாக்களித்தது.இதனால் அவர் அதிக வாக்குகள் பெற்றார். 2வது இடத்திற்கு மாவோயிஸ்ட் வேட்பாளர் சென்றார்.
இருப்பினும் ராம் பரன் யாதவுக்கு வெற்றிக்குத் ேதவையான வாக்குகள் கிடைக்கவில்லை. இதையடுத்து மறு வாக்குப் பதிவு நடந்தது. இதில் 308 வாக்குகளைப் பெற்று ராம் பரன் யாதவ் வெற்றி பெற்றார்.
இதையடுத்து நேபாளத்தின் முதல் ஜனாதிபதியாக தேர்வானார் ராம் பரன் யாதவ்.
ராம்பரன் இந்திய வம்சவாளியைச் சேர்ந்தவர். கொல்கத்தாவில் மருத்துவம் பயின்றார். டாக்டராகப் பணியாற்றி வந்த அவர் பின்னர் நேபாளகாங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் சார்பில் 3 முறை எம்.பியாக பதவி வகித்துள்ளார்.
நாளை ராம் பரன் யாதவ் நேபாளத்தின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்கிறார். அதிபர் ராம்பரன் யாதவுக்கு நேபாள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
பதவியேற்பை தொடர்ந்து முன்னாள் மன்னர் ஞானேந்திரா பயன்படுத்திய கருப்பு நிற லிமோசின் காரில் அதிபர் யாதவ் பாதுகாப்பு வாகனங்கள் பின்தொடர, மகாராஜ் கஞ்ச் பகுதியில் உள்ள ஷீத்தல் நிவாஸ் என்ற தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு செல்கிறார்.
அதிபருக்கு ஆயிரம் ராணுவ வீரர்கள் அடங்கிய பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications