ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி தில்லைநகர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர், கமிஷனருக்கு இ-மெயில் மூலம் புகார் மனு அளித்தார். அதில் தனது மனைவிக்கு யாரோ ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி தொல்லை கொடுப்பதாக புகார் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் அந்த எண்ணை ட்ரேஸ் செய்தனர். இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் கீழையூர் கிராமம் கண்ணத்தான்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த செல்போன் அவருடையது அல்ல என்றும், வீரமணி என்பவருடையது என்றும் தெரியவந்தது. வீரமணி தன்னுடைய செல்போனை தொலைத்ததும், அதை ராஜ்குமார் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications