கொறடா உத்தரவு-சோம்நாத் மீறியது ஏன்?: பாஜக
டெல்லி: ஒவ்வொரு எம்.பியும் அக்கட்சியின் கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். சோம்நாத் சாட்டர்ஜிக்கும் அது பொருந்தும். நான் சோம்நாத் இடத்தில் இருந்து, கட்சி என்னை ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தால் உடனடியாக விலகியிருப்பேன் என்று கூறியுள்ளார் லோக்சபா பாஜக துணைத் தலைவர் வி.கே.மல்ஹோத்ரா.
சோம்நாத் சாட்டர்ஜி நீக்கம் குறித்து கருத்து தெரிவித்த வி.கே.மல்ஹோத்ரா கூறுகையில், சோம்நாத் சாட்டர்ஜிக்கு கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தாரா என்பது குறித்து எனக்கு தெரியாது.
இருப்பினும் கொறடா உத்தரவி பிறப்பிக்கப்பட்டிருந்தால், அதை எம்.பிக்கள் ஏற்றுக்கொண்டுதான்ஆக வேண்டும். மீறி நடந்தால் நடவடிக்கையையும் சந்தித்தாக வேண்டும். இதுதான் நடைமுறை.
நான் சோம்நாத் சாட்டர்ஜி இடத்தில் இருந்திருந்தால், என்னை ராஜினாமா செய்ய வேண்டும் என கட்சி உத்தரவிட்டிருந்தால், உடனடியாக ராஜினாமா செய்திருப்பேன்.
இப்போதும் கூட துணை சபாநாயகர் சரஞ்சித் சிங் அத்வால், தேசிய ஜனநாயக கூட்டணி விரும்பினால், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதாகவும், இதற்காக துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அத்வால் தனது பதவியில் தொடரட்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி அனுமதி
அளித்தது என்றார் மல்ஹோத்ரா.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications