புலிகளுக்கு தமிழக மீனவர்கள் உதவி- இலங்கை
ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளுக்கு தமிழக மீனவர்கள் உதவி செய்வதாக இலங்கை அரசு சந்தேகப்படுவதாக ராமேஸ்வரம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் கூறினார்.
இலங்கையில் தெற்காசிய மக்கள் சபை மாநாடு கடந்த 20ம் தேதி நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து 80 பேர் சென்றனர். இதில் தமிழகத்தில் இருந்து மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ் உள்பட 30 பேர் சென்றனர்.
மாநாட்டில் கலந்து கொண்டு ராமேஸ்வரம் திரும்பிய மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாக் ஜலசந்தியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் பெனிக்கஸ் பெரேராவை சந்தித்து பேசினோம்.
எங்களது கோரிக்கையை கவனமாக கேட்டார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தாது. அது விடுதலைப் புலிகளின் செயலாக இருக்கும் என்று அவர் கூறினார்.
மேலும், விடுதலைப் புலிகளுக்கு தமிழக மீனவர்கள் உதவி செய்வதாக சந்தேகம் உள்ளது. இந்திய மீன்பிடி படகுகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றனர். மீனவர்கள் பிரச்னையை தீர்க்க இரு நாட்டு மீனவர்களும் கலந்து பேச வேண்டும்.
இலங்கை கடற்படையின் செயல்பாடு தமிழக மீனவர்களுக்கு ஆபத்தை உண்டாக்காது என்று அமைச்சர் கூறினார். இது குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம் என்றார் தேவதாஸ்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications