நீலகிரி மாவட்டத்தில் கன மழை-குளிரில் 'நடுங்கும்' ஊட்டி
ஊட்டி: ஊட்டி உள்பட நீலகிரி மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிருடன் போக்குவரத்தும் சீர்கெட்ட, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கூடலூர், குன்னுர், கோத்தகிரி, ஊட்டி உள்பட மாவட்டத்தின் அனைத்து பலத்த மழை பெய்து வருகிறது. ஊட்டியில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய மழை கொட்டியது. இன்றும் மழை தொடர்கிறது.
தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க நீலகிரி மாவட்டத்தின் பதினோருக்கும் மேற்பட்ட அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் அணைகள் வறண்டன.
இந் நிலையில் கன மழை பெய்து வருவதால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. முதுமலை சரணாலயத்தில் உள்ள மாயார், கல்லட்டி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் கிளை ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கூடலூரில் இருந்து கேரளாவுக்கு பிரியும் பாண்டியார் புன்னம்புழா ஆற்றிலும் நீர் வெள்ளமாக ஓடிக் கொண்டுள்ளது.
இந்த ஆறுகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக குளியல் போட்டு வருகின்றன.
இந்த மழையால் ஊட்டியில் வெப்பநிலை பெரும் அளவில் குறைந்து கடும் குளிர் நிலவுகிறது. கன மழையால் சுற்றுலா பயணிகள் வருகை பெருமளவு குறைந்து காணப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications