கதவை பூட்டாமல் பறந்த விமானம்-அவசரமாக தரையிறங்கியது

இதையடுத்து அந்த விமானத்தின் இரு சிப்பந்திகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதில் மத்திய அமைச்சர் சரத்பவாரும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியிலிருந்து நேற்று மாலை இந்த விமானம் மும்பை கிளம்பியது. போயிங்-737 ரக விமானமான இந்த விமானம் 5,000 மீட்டர் உயரத்தை அடைந்த நிலையில், விமான சிப்பந்திகள் கதவு சரியாக பூட்டப்படாமல் திறந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.
அந்தக் கதவு வழியாக விமானத்திலிருந்து அழுத்தப்பட்ட காற்று வெளியேறியது மட்டுமல்லாமல், வெளியிலிருந்தும் காற்று புகுந்தது பெரும் சத்தம் கிளம்பியது. மேலும் அந்த கதவு வழியாக வெளிப் பகுதியையும் பார்க்க முடிந்தது.
இதையடுத்து உடனடியாக விமானிக்கு அவர்கள் தகவல் தந்தனர்.
இதைத் தொடர்ந்து விமானத்தை உடனடியாக டெல்லிக்குத் திருப்பினர் விமானிகள். மேலும் 8,000 அடி உயரத்துக்கு விமானத்தை கொண்டு சென்ற விமானிகள் விமான எரிபொருளை வெளியேற்றினர்.
பின்னர் டெல்லியில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறங்கியது.
இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், விமானத்தின் கதவுகளை இரு சிப்பந்திகள் சரியாக பூட்டாதது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதற்குக் காரணம், சரத் பவாரின் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் தான் விமானத்துறை அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
Reliance: 6ஆவது ஆண்டாக ஊதியமில்லாமல் வேலை செய்யும் முகேஷ் அம்பானி! ஏன் என்னாச்சு? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications