காரைக்குடியில் எம்.ஜி.ஆர் சிலை தலை துண்டிப்பு
காரைக்குடி: காரைக்குடியில் எம்.ஜி.ஆர் சிலையின் தலை துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சிலையை சேதப்படுத்திய விஷமிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி 5 முனை சந்திப்பில் மார்பளவிலான எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இன்று காலை இந்த சிலையின் தலை துண்டிக்கப்பட்டு கீழே கிடந்தது. இதைப் பார்த்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்து அங்கு திரண்டனர். பெருமளவில் அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பும், பதட்டமும் நிலவியது. சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி அவர்கள் கோஷமிட்டு சாலை மறியலில் இறங்கினர்.
அப்போது காரைக்குடி வந்திருந்த அதிமுக அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். சேதமடைந்த சிலையைப் பார்வையிட்ட அவர் பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த சம்பவம் குறித்து கட்சித் தலைமைக்குத் தெரிவித்திருப்பதாகவும், போலீஸார் நடவடிக்கையைப பொருத்து, கட்சித் தலைமையின் முடிவின்படி அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications