மின் தடை-கண்டித்து ஆக-1ல் சரத்குமார் ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின்சாரத் தடை, உரத் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றைக் கண்டித்து ஆகஸ்ட் 1ம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு அறிவித்திருக்கும் மின்வெட்டுக்களால், இருள் சூழ்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து பட்டினியால் வாடும் அவல நிலை மற்றும் மீனவர்களின் மீதான தொடர் தாக்குதல்களால் அலைகடலோரமெங்கும், அழுகுரல்கள் சூழ்ந்து நிற்கும் பரிதாபம்.
பொய்த்துவிட்ட தென்மேற்கு பருவ மழையாலும், கேள்விக்குறியாகி நிற்கும் வடகிழக்கு பருவ மழையாலும், மேட்டூர் மற்றும் பெரியார் அணைக்கட்டுகளில் குறைந்துவரும் நீர்த்தேக்க அளவுகளாலும், தொடர்ந்து நிலவிவரும் உரத் தட்டுப்பாடுகளாலும், பெரும் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகளின் துயரநிலை, கட்டுப்பாடின்றி வின்முட்டும் அளவுக்கு உயர்ந்துவரும் விலைவாசி.
இரட்டிப்பாகிவிட்ட கல்விக் கட்டணங்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் தொடங்கி தற்போது சென்னை வரை நீண்டுவிட்ட சைக்கோ மனித தாக்குதல்கள், தொடர்கொலை சம்பவங்கள் என நிம்மதியையும், தூக்கத்தையும் இழந்து நிற்கிறார்கள் மக்கள்.
இப்படி அனைத்து துறைகளிலும், முற்றிலுமாய் செயலிழந்து நிற்கும் தமிழக அரசை வன்மையாக கண்டித்து வருகிற 1.8.2008 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்கள் இணைந்து நடத்தப்படுகிறது. சரத்குமார் தலைமையேற்று நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications