பாஜக எம்.பிக்களுக்கு லஞ்சம்-விசாரிக்க குப்புசாமி உள்ளிட்ட 7 பேர் குழு
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 3 பாஜக எம்பிக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் லஞ்சம் கொடுக்கப்பட்டது குறித்த விவகாரத்தை காங்கிரஸ் எம்.பி தலைமையிலான 7 பேர் கொண்ட விசாரணைக் குவுவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நியமித்துள்ளார்.
இந்தக் குழுவில் திமுக எம்பி குப்புசாமியும் இடம் பெற்றுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது கடந்த 22ம் தேதி வாக்கெடுப்பு நடந்தது. அப்போது பாஜக எம்பிக்கள் அசோக் ஆர்கல், பகன்சிங் குலஸ்தே, மகேஷ் பகோரா ஆகியோர், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தங்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக லோக்சபாவில் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி சர்ச்சை எழுப்பினர்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று சம்பந்தபட்ட பாஜக எம்பிக்கள் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாகவும் புகார் தரப்பட்டது. லஞ்சம் தரப்பட்டது தொடர்பான வீடியோ டேப்பை, சிஎன்என் டிவி நிறுவனமும் சபாநாயகரிடம் வழங்கியுள்ளது.
இதையடுத்து 7 பேர் கொண்ட விசாரணைக் குழுவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்துள்ளார்.
இந்தக் குழுவின்தலைவராக மூத்த காங்கிரஸ் உறுப்பினர் கிஷோர் சந்திரா தியோ அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தவிர லோக்சபா பாஜக துணைத் தலைவர் வி.கே. மல்ஹோத்ரா, முகமது சலீம் (சிபிஎம்), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாடி), தேவேந்திர பிரசாத் யாதவ் (ஆர்.ஜே.டி), ராஜேஷ் வர்மா (பகுஜன் சமாஜ்), செ.குப்புசாமி (திமுக) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க விசாரணை குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக லோக்சபா செயலாளர் ஆச்சாரியா தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து விசாரணை நடைமுறைகள் குறித்து முடிவு எடுப்பதற்கான முதல் கூட்டத்தை விரைவில் கூட்ட இருப்பதாக விசாரணை குழு தலைவர் கிஷோர் சந்திர தியோ தெரிவித்தார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications