பெங்களூர் பள்ளிகளில் வெடிகுண்டு புரளி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தொடர் குண்டுவெடிப்புகளால் மிரண்டு கிடக்கும் பெங்களூரை இன்று வெடிகுண்டு புரளிகள் மேலும் கலங்கடித்தன.

அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளின் தாக்கத்திலிருந்து பெங்களூர் இன்னும் மீளவி்ல்லை. வர்த்தகப் பகுதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. நெரிசலில் திக்கிக் திணறும் சாலைகளிலும் போக்குவரத்து மிகக் குறைவாகவே உள்ளது.

இன்றும் பல பள்ளிகளில் பெரும் எண்ணி்க்கையிலான மாணவ, மாணவர்கள் வரவில்லை.

இந் நிலையில் இன்று காலையிலிருந்து பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து புரளிகளும் தொலைபேசி மிரட்டல்களும் வந்து ஊரையே கலங்கடித்துக் கொண்டுள்ளன.

முதலில் மைகோ லே-அவுட் பகுதியி்ல் உள்ள லிட்டில் ரோஸஸ் என்ற பள்ளியில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து பெற்றோர் அலறிக் கொண்டு ஓடி வந்து குழந்தைகளை அழைத்துச் சென்றனர். அந்தப் பள்ளி மூடப்பட்டது.

இதைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள செயின்ட் ஆண்டனி பள்ளிக்கும், இதன் தொடர்ச்சியாக ஜெயநகர்-திலக் நகர் பகுதியில் உள்ள கார்மெல் மெட்ரிக் பள்ளியிலும் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக புரளி கிளம்பியது.

இதையடுத்து பெற்றோர் விரைந்து வந்து குழந்தைகளை அழைத்துச் சென்றனர். இந்தப் பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் குண்டு ஏதும் சிக்கவில்லை. இந்தச் செய்திகள் புரளி தான் என்றாலும் பெங்களூரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+