சூரத்தில் மோடி-இன்றும் 2 குண்டுகள் கண்டுபிடிப்பு
சூரத்: சூரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று காலை மீண்டும் இரு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் சூரத்தில் 18 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டன. இது அந்நகரத்தையே பீதியில் ஆழ்த்தியது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி சூரத்துக்கு இன்று காலை சென்றார். குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட பகுதிகளை மோடி பார்வையிட்டார்.
இந் நிலையில் சூரத்தின் வராச்சா சாலையில் லபேஷ்வர் என்ற இடத்தில் இன்று காலை ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாலையில் நனாய் செளபதி என்ற பகுதியில் மரத்தில் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
குஜராத்தில் பந்த்:
இந் நிலையில் இன்று சில அமைப்புகள் குஜராத்தில் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு:
சூரத்தில் வராத்தா பகுதியில் தான் அதிக அளவில் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications