கார்-பஸ்-லாரி மோதி தீ விபத்து- இருவர் பலி
மதுரை: மதுரை அருகே கார், பஸ் மற்றும் லாரி ஆகியவை அடுத்தடுத்து மோதிய விபத்தில் பஸ்சும், லாரியும் தீப்பிடித்து எரிந்தன. இதில் கார் டிரைவரும் பஸ் பயணி ஒருவரும் பரிதாபமாக இறந்தனர்.
மதுரையில் இருந்து ராஜபாளையத்திற்கு நேற்று காலை கார் ஒன்று புறப்பட்டுச் சென்றது. மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த டிரைவர் நாகேந்திரன் காரை ஓட்டிச் சென்றார். அதேப் பகுதியைச் சேர்ந்த பாண்டி மற்றும் சையது இப்ராகிம் ஆகியோர் காரில் சென்றனர்.
மதுரை மாவட்ட எல்லையான பாறைபட்டிக்கும், விருதுநகர் மாவட்ட எல்லையான அழகாபுரிக்கும் இடையே காலை 10.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது.
காருக்கு முன்னால் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பக்கவாட்டில் கார் முந்தி சென்றது. அப்போது அப்போது எதிரே செங்கோட்டையில் இருந்து திருப்பூருக்கு செல்லும் அரசு பஸ்சும் வேகமாக வந்தது.
இதில் பஸ்சும் காரும் பயங்கரமாக மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் கார் நூறு அடி தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு அப்பளம்போல் நொறுங்கியது. இதில் கார் டிரைவர் நாகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மோதிய வேகத்தில் காருக்கு பின்னால் வந்த டிப்பர் லாரி மீது பஸ் மோதி நின்றது. இதில் லாரியின் டீசல் டேங்க் உடைந்து தீப்பிடித்து எரிந்தது.
பஸ்சில் இருந்த 80 பயணிகள் அலறியடித்துக் கொண்டு பஸ்சை விட்டு இறங்கி ஓடினர். அதற்குள் பஸ்சும், லாரியும் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த பேரையூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் லாரியும், பஸ்சும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
விபத்தில் காயமடைந்த 8 பேர் திருமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மதுரை மருத்துமனையிக்கு கொண்டு செல்லும்போது இறந்தார். இறந்தவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை.
-
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications