சொத்து குவிப்பு: அமைச்சர் கீதா ஜீவனை விடுவிக்க ஹைகோர்ட் மறுப்பு
மதுரை: வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை விடுவிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை மறுத்து விட்டது.
தமிழக சமுக நலத்துறை அமைச்சராக இருப்பவர் கீதா ஜீவன். இவர் முன்பு தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.
அப்போது தனது பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக கீதா ஜீவன், அவரது தந்தையும் மாவட்ட திமுக செயலாளருமான பெரியசாமி, அவரது மனைவி, இரு மகன்கள், கீதா ஜீவனின் கணவர் ஜீவன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதி மன்றத்தில் கீதா ஜீவன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து கீழ் நீதி மன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, மதுரை உயர் நீதி மன்ற கிளையில் சீராய்வு மனுவை அமைச்சர் கீதா ஜீவன் தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. மேலும், மனுதாரர் தனது வருமானத்தில் சொத்துக்களை வாங்கியதற்குரிய ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை.
எனவே இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க இயலாது என்று கூறி அமைச்சர் கீதா ஜீவனின் மனுவை தள்ளுபடி செய்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications