புதிய கேஸ் இணைப்பு தற்காலிகமாக நிறுத்தம் - இந்தியன் ஆயில்
டெல்லி: வீடுகளுக்கு புதிய சமையல் கேஸ் இணைப்புகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன தலைவர் பெஹூரியா கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் ஜூன் வரையிலான 3 மாதத்தில் ஐஓசியின் நஷ்டம் அதிகரித்துள்ளது. எனவே புதிய சமையல் கேஸ் இணைப்பு வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளோம்.
தற்போது 2 லட்சத்துக்கும் அதிகமானோர் சமையல் கேஸூக்கு விண்ணப்பித்துள்ளனர். நஷ்டம் காரணமாக ஓராண்டுக்கு புதிய இணைப்புகள் வழங்குவதில்லை என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
புதிய இணைப்புகளுக்காக ஆலை விரிவாக்கம் செய்யும் திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய வாடிக்கையாளர்களுக்கு இணைப்பு வழங்கும் அளவுக்கு நிறுவனத்தில் மூலதனமும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இணைப்புகள் வழங்கப்படவில்லை.
ஒரு சிலிண்டருக்கு ரூ.338.53 அளவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றார் அவர்.
தற்போது ஐஓசியில் 9.8 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். நடப்பு நிதியாண்டில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விற்பனை மூலம் இந்நிறுவனத்துக்கு ரூ.1 லட்சத்து 21,015 கோடி நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications