தீவிரவாதிகளின் அடுத்த குறி- டெல்லி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் நாச வேலைகளில் ஈடுபடப் போவதாக தீவிரவாதிகள் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்திற்கு இந்த மிரட்டல் வெயில் வந்துள்ளது.

பெங்களூர், அகமதாபாத் நகரங்களில் பெரும் நாச வேலைகளில் ஈடுபட்ட தீவிராதிகள் சூரத் நகரையும் தகர்க்க பல இடங்களில் வெடிகுண்டுகளை வைத்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக தொழில் நுட்பக்கோளாறு காரணமாக அவை எதுவும் வெடிக்கவில்லை. சூரத் போலீஸார் தொடர்ந்து குண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லிக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர். இதுதொடர்பாக ஜப்பான் தூதரகத்திற்கு இமெயில் மூலம் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

நேற்று வந்த அந்த இ மெயிலில், ஜெய்ப்பூர், அகமதாபாத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் குண்டுகள் வெடிக்கும். நாங்கள் குறி வைத்துள்ள இடங்களில் சரோஜினி நகரும் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து டெல்லி போலீஸார் தலைநகர் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்ைககள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஜப்பான் தூதரகத்திற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள ஜப்பான் கலாச்சார மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+