கச்சத்தீவு ஒப்பந்ததை எதிர்த்து வழக்கு-ஜெயலலிதா
சென்னை: கச்சத் தீவு இலங்கைக்கு தரப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1974ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு கச்சத் தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததை எதிர்த்து முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தை நாடப் போகிறேன்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க இந்த குறைந்தபட்ச நடவடிக்கையாவது எடுக்கப்பட்டே ஆக வேண்டும்.
போருபானி யூனியனையும் அதைச் சுற்றிய பகுதிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்குவது தொடர்பாக இந்தியாவும் அந்த நாடும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,
இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் மற்ற நாட்டிடம் வழங்க அரசியல் சட்டத்தின் 368வது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், கச்சதீவு விஷயத்தில் அப்படி எந்த ஒப்புதலையும் இந்திரா காந்தி பெறவில்லை. அடுத்து வந்த அரசுகளும் பெறவில்லை.
இதனால் கச்சத்தீவு ஒப்பந்தம் முறையானது தானா என்பது குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தை பிரதமர் மன்மோகன் சிங் அணுக வேண்டும்.
இதை பிரதமர் செய்யத் தவறினால், நான் நீதிமன்றத்தை நாடுவேன். உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகக் கோரியோ அல்லது ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியோ வழக்குத் தொடருவேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications