இந்திய தூதரக தாக்குதலில் தலிபான்-ஐஎஸ்ஐ: யு.எஸ்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. அதேபோல காபூலில் இந்திய தூதரகம் மீது தாக்குல் நடத்தியவர்களுடனும், ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு உள்ளதாக அமெரிக்கா ஆதாரங்களுடன் பாகிஸ்தான் அரசிடம் புகார் கூறியுள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் குறிப்பாக இந்தியாவில் தீவிரவாதத்ைத தூண்டி விட்டு அரங்கேற்றி வருகிறது ஐஎஸ்ஐ என்று இந்தியா நீண்ட காலமாக புகார் கூறி வருகிறது. ஆனால் அதை பாகிஸ்தான் ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை. அதேபோல, அமெரிக்காவும் இந்தப் புகாரை இதுவரை உறுதியாக ஏற்றுக் கொண்டதில்லை.
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடைபெற்றது. தலிபானுடன் இணைந்து ஐஎஸ்ஐதான் இதை நிகழ்த்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது. ஆப்கானிஸ்தான் அரசும் இதே புகாரைக் கூறியது. ஆனால் அதை அப்போது அமெரிக்கா மறுத்தது.
ஆனால், ஐஎஸ்ஐக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், காபூலில் தாக்குதலில் ஈடுபட்டவர்களுடன் ஐஎஸ்ஐக்கு தொடர்பு இருப்பதாகவும் பாகிஸ்தானுக்கே வந்து ஆதாரங்களுடன் புகார் கூறியுள்ளது அமெரிக்கா.
இதுதொடர்பான செய்தியை நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அந்த இதழில் வெளியாகியுள்ள செய்தி வருமாறு:
மவுலவி ஜலாலுதீன் ஹக்கானி தலைமையில் செயல்படும் தீவிரவாதக்குழுவினருடன் ஐ.எஸ்.ஐ. அமைப்பில் உள்ளவர்களுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக அமெரிக்க உளவு நிறுவன அதிகாரிகள் நம்புகிறார்கள்.
ஹக்கானி குழுவினர் சமீபகாலமாக ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். காபூல் இந்தியத் தூதரக தாக்குதலிலும் ஹக்கானி குழுவுக்கு தொடர்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆதாரங்களுடன் சிஐஏ அதிகாரி ஒருவர் இஸ்லாமாபாத் வந்து பாகிஸ்தான் அரசிடம் புகார் கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்காவின் புகாருக்கு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானி மறுப்பு ெதரிவித்துள்ளார். அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள கிலானி, ஐ.எஸ்.ஐக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா என ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.எஸ்.ஐ. மிகப்பெரிய நிறுவனம். அதில் இடம் பெற்று இருக்கும் சிலர் தீவிரவாதிகளிடம் அனுதாபம் கொண்டு இருக்கிறார்கள் என்று கூறப்படுவதை நம்பமுடியவில்லை. ஏனெனில் ஐ.எஸ்.ஐ. பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications