சென்னை விமான நிலையம்-மகளிர் கல்லூரிக்கு குண்டு மிரட்டல்
சென்னை: சென்னை விமான நிலையத்துக்கும், மின்ட் பகுதியில் உள்ள அரசு பாரதி மகளிர் கல்லூரிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
இதையடுத்து விமான நிலையத்தில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மிரட்டலுக்குள்ளான கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. அக்கல்லூரிக்கு அருகில் உள்ள இன்னொரு கல்லூரி மற்றும் பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டது.
சென்னை விமான நிலையத்தின் மேலாளர் மாதவ ராவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் வந்தது. அதி்ல் அரசு கேபிள் நிறுவனம் தொடங்கும் முடிவை கைவிடாவிட்டால் ஆகஸ்ட் 2ம் தேதி விமான நிலையத்துக்கு குண்டு வைக்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகளும், பாதுகாப்புப் படையினர், போலீசார் இன்று காலை அவரச ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில், எந்த மிரட்டலையும் லேசாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
சூட்கேசால் பரபரப்பு:
இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று சூட்கேசால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இன்று அதிகாலை 2 மணியளவில் விமான நிலையத்தில் அனாதையாக கிடந்த இந்த சூட்கேசில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற பீதி பரவியது
தகவலறிந்த வெடிகுண்டு நிபுணர்கள் உடனே விரைந்து வந்து சோதனை செய்தனர்.
சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் சில துணிகளும், ஒரு வாட்ச்சும் இருந்தது.
மகளிர் கல்லூரிக்கு...:
அதே போல முத்தியால்பேட்டை காவல்நிலையத்திற்கு இன்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பாரதி கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் கல்லூரி முதல்வரை போனில் அழைத்து மாணவிகளை பத்திரமாக வெளியேற்றி விடுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து கல்லூரி மைதானத்திற்கு மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் போலீஸார் மோப்ப நாய்களுடன் விரைந்து சென்று கல்லூரி முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இதில் எந்த குண்டும் சிக்கவில்லை. இதையடுத்து அது வெறும் புரளி எனத் தெரியவந்தது.
இருப்பினும் மாணவிகளிடையே பீதி நிலவியதால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இதேபோல அருகில் உள்ள ஒரு கல்லூரிக்கும், பள்ளிக்கும் கூட இன்று விடுமுறை விடப்பட்டது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications