சேது திட்டத்தை தாமதப்படுத்த கூடாது-வீரமணி
சென்னை: அரசியல் காரணங்களை காட்டி சேது சமுத்திர திட்டத்தை தாமதப்படுத்த கூடாது. திட்டமிட்டபடி நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கும் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமைகள் குறித்தும் நிலையான முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை இப்போது ஏற்பட்டு உள்ளது.
இலங்கையில் நடக்கும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங், மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு, அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண அந்நாட்டு அதிபருடன் பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 4ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.சென்னையில் எனது தலைமையில் போராட்டம் நடக்கும்.
சேது சமுத்திர திட்டத்தை 2009ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும். மாற்றுப் பாதை குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு தனது ஆய்வு அறிக்கையை சமர்பிக்க காலக்கெடுவை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
அரசியல் காரணம் காட்டி இந்த பெரிய திட்டத்தை தாமதப்படுத்துவது நல்ல தல்ல. தமிழக மக்களுக்கு பொருளாதார வளம் தரும் இத்திட்டத்தை எந்த காரணம் கொண்டும் கைவிடக் கூடாது. திட்டமிட்டபடி இத்திட்டத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications