ராமநாதபுரம்: வெடிபொருட்களுடன் பெண் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வெடிபொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் அருகே உள்ள திருப்பாலைக்குடி கடற்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரை கண்காணித்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். விசாரணையில் அதே பகுதியில் உள்ள கிழக்குத் தெருவைச் சேர்ந்த சித்தி என்பது தெரியவந்தது.
அவரை சோதனை செய்தபோது அவரிடம் 50 ஜெலட்டின் குச்சிகள், 48 டெட்டர்னேட்டர்கள், 10 மீட்டர் வயர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து திருப்பாலைக்குடி போலீஸார் அவரை கைது செய்தனர். அவர் யார், எதற்காக வெடிபொருட்களுடன் நடமாடினார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் இப்பகுதியில், விடுதலைப் புலிகளுக்கு வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்த முயன்றதாக சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும், சித்திக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications