ஜெபம் செய்வதாக கூறி ரூ.1.5 லட்சம் மோசடி
பாவூர்சத்திரம்: ஜெபம் செய்து மன வளர்ச்சிக் குன்றிய சிறுவனை குணப்படுத்துவதாக கூறி ரூ.1.5 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி வீட்டு வசதி வாரிய காலனியில் வசிப்பவர் செல்லத்துரை, ஆசிரியர். இவரது மகன் ராஜசேகரன், மனவளர்ச்சி குன்றியவர்.
பாவூர்சத்திரம் செல்வவிநாயகபுரத்தை சேர்ந்த ஆசிரியர் தம்பதி மாணிக்கம்- தீபாராணி மேகலா. ஜெபம் செய்தால் மனவளர்ச்சி குன்றிய உங்கள் மகன் ராஜசேகரனை குணப்படுத்தி விடலாம், அதற்கு அதிக செலவாகும் என்று செல்லத்துரையிடம் மாணிக்கமும் தீபராணியும் கூறினர்.
இதை நம்பிய செல்லதுரை கடந்த 2003ம் ஆண்டு ரூ.1.5 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாக ஜெபம் செய்தும் ராஜசேகரனுக்கு குணமாகவில்லை.
இதையடுத்து செல்லதுரை தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் ஆசிரிய தம்பதியினர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து செல்லதுரை பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதில் கடந்த 13ம் தேதியும் மாணிக்கம் வீட்டுக்கு சென்று பணம் கேட்டபோது, என்னை அவதூறாக பேசியும், கொலை செய்து விடுவோம் என்று மாணிக்கமும், தீபராணியும் மிரட்டினர் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பண மோசடி செய்த ஆசிரியர் தம்பதிகளை தேடி வருகின்றனர்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications