தேடப்படும் 11 தீவிரவாதிகள்-துப்பு கொடுத்தால் பரிசு: போலீஸ்
{image-Absconded Terrorists250_05082008.jpg tamil.oneindia.com}சென்னை: தமிழகத்தில் சுதந்திர தினத்தன்று நாச வேலையில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய 11 தீவிரவாதிகளின் புகைப்படங்களை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. இவர்கள் குறித்த தகவல் தருவோருக்கு பரிசு அளிக்கப்படும் எனவும் அது தெரிவித்துள்ளது.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலிஅப்துல்லா என்ற தீவிரவாதியின் தலைமையிலான ஒரு கூட்டம், தமிழகத்தில் சுதந்திர தினத்தன்று பெரும் நாச வேலைகளில் ஈடுபட சதித் திட்டம்தீட்டியிருந்தது. போலீஸாரின் துல்லியமான நடவடிக்கையால் இந்த சதித் திட்டம் முளையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அலி அப்துல்லா, அப்துல் கபூர், ஹீரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அப்துல்லாவிடம் நடத்திய விசாரணையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜா ஹூசேன் என்கிற இன்னொரு கைதிக்கும் இந்த சதித் திட்டத்தில் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த சதித் திட்டத்தில் 11 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அனைவரும் தலைமறைவாகஇருப்பதாகவும், அவர்கள் குறித்து துப்பு கொடுப்போருக்கு பரிசளிக்கப்படும் எனவும்காவல்துறை அறிவித்துள்ளது. 11 பேரின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இவர்கள் தொடர்பான தகவல்தெரிந்தோர் அதுகுறித்து தொலைபேசி மூலமும் தெரிவிக்கலாம்.
தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்- 044 - 28555069, 28555045, 28555036
தேடப்படும் தீவிரவாதிகள் விவரம்:
- நாகூர் அபுபக்கர் சித்திக்
- வாணியம்பாடி முஷ்டாக் அகமது
- கோவை டெய்லர் ராஜா என்கிற ராஜா என்கிற சாதிக்
- கோழிக்கோடு நூஹூ என்கிற ரஷீத்
- கோவை முஜிபுர் ரஹ்மான்
- மேலப்பாளையம் முகம்மது அலி என்கிற யூனிஸ் என்கிற மன்சூர்
- மலப்புரம் கினி என்கிற குஞ்சு முகம்மது
- கோவை அயூப் என்கிற அஷ்ரப் அலி
- ஹைதராபாத் அபு உமர்
- அதிராம்பட்டினம் தெளபீக்
- சவூதி அரேபியாவைச் சேர்ந்த அபு ஹம்சா
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications