சுற்றுலா பயணிகள்-பணியாளர் மோதல்: கார், ஹோட்டல் சூறை
தென்காசி: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கும், ஹோட்டல் பணியாளர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் காரும், ஹோட்டலும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் மதுரையிலிருந்து ஆண்டிச்சாமி என்பருக்கு சொந்தமான மாருதி ஆம்னி காரில் முனியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன், முத்துகுமார், சதீஸ், குமார், பாலா ஆகியோர் குற்றாலம் வந்தனர்.
அப்போது பிரானூர் பார்டரில் பரோட்டா சாப்பிட அங்குள்ள கடைக்கு வந்தனர். வேலுச்சாமி என்பவரது ஹோட்டலில் சாப்பிட சென்றனர். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சாப்பாடு பறிமாறியவர்களுக்கும், சாப்பிட்டவர்களுக்கும் இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் இருதரப்பினரும் அடித்துக் கொண்டனர். ஆத்திரமடைந்த ஈஸ்வரன் கோஷ்டியினர் ஹோட்டலை சூறையாடினர். ஊழியர்கள் இசக்கி தேவர், செல்லப்பா, நமச்சிவாயம், கடை உரிமையாளர் வேலுச்சாமி ஆகியோரையும் தாக்கினர்.
இதைப் பார்த்த அப்பகுதியினர் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து தாக்கியதால் ஆத்திரமடைந்த ஹோட்டல் ஊழியர்களும் அப்பகுதியினரும் ஈஸ்வரம் கோஷ்டியை அடித்து துவைத்தனர்.
அவர்கள் வந்த ஆம்னி காரையும் அடித்து நொறுக்கினர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். படுகாயமடைந்த இருதரப்பினரும்செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செங்கோட்டை போலீசார் இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications