10 வயது சிறுமி கற்பழித்து கொலை-வாலிபருக்கு தூக்கு
மதுரை: பத்து வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த காமகொடூரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
மதுரை மேல அனுப்பாண்டி ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் செல்வம் (22). தான் ஒரு அனாதை என்று கூறி நடராஜன் என்ற பூ வியாபாரி வீட்டில் தங்கி பூ கட்டும் வேலைக்கு சேர்ந்தார்.
நடராஜனின் மகன் யோகநாதனை (9) கடந்த 17.9.2006ம் ஆண்டு ஹோமோ செக்சில் ஈடுபடுத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.
பின்னர் ஜெய்ஹிந்தபுரத்தை சேர்ந்த பூ வியாபாரி மாணிக்கவாசகத்திடம் வேலைக்கு சேர்ந்தான். அவரது மகள் நாகசாந்தியை (10) கடந்த 22.10.2006ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தார்.
சிறுமியின் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி அட்டைப் பெட்டியில் போட்டு மறைத்து வைத்தார். ஆனால் அன்றைய தினமே போலீசில் செல்வம் சரணடைந்தார்.
யோகநாதன் கொலை வழக்கு மதுரை இரண்டாவது நீதிமன்றத்திலும், நாகசாந்தி கொலை வழக்கு மகளிர் நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. சிறுமி தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எப்சிபாய், இரண்டு குழந்தைகளை கொடூரமான முறையில் கொலை செய்த செல்வத்துக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து நீதிபதி சித்தார்த்தர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது: செல்வம் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் மீதான குற்றங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன. செல்வத்திற்கு சாகும் வரை தூக்கும் தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதிக்கிறேன் என்று கூறினார்.
தான் செய்த தவறுக்கு இறைவன் சரியான தீர்ப்பு கொடுத்துவிட்டதாக மரண தண்டனை பெற்ற செல்வம் கூறினார்.
மதுரை மகளிர் நீதிமன்றம் கடந்த 2003ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதன் முதலாக இந்த வழக்கில்தான் தூக்கு தண்டனையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications