ஓகேனக்கல் எங்களுக்கே சொந்தம்-கர்நாடக அமைச்சர்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள பல அணைகளும் நிரம்பி வருகின்றன.
இதையடுத்து கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கூடுதலை நீரை கர்நாடகம் காவிரியில் வெளியேற்றி வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகள் உள்பட கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஹாரங்கி, கபினி ஆகிய அணைகள் நிரம்பிவிட்டன.
ஹேமாவதி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதையடுத்து இந்த அணைகளில் இருந்து கடந்த 29ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நீர் கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டூரை அடைந்தது. இதனால் கடந்த மாதம் 31ம் தேதி 52 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 60.68 அடியாக உயர்ந்தது.
இப்போது அணைக்கு வினாடிக்கு 23,178 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
ஓகேனக்கல் எங்களுக்கே சொந்தம்-கர்நாடகம்:
இதற்கிடையில் ஓகேனக்கல் பகுதி முழுவதும் எங்களுக்கே சொந்தம் என்று கர்நாடக எரிசக்தித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கூறியுள்ளார். அவர் கூறுகையில்,
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதுபற்றி எதுவும் கூற முடியாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் இரு மாநில முதல்வர்களையும் அழைத்து மத்திய அரசு பேச வேண்டும்.
இந்த விவகாரத்தில் கர்நாடகாவின் நலனை ஒருபோதும் விட்டுத்தர முடியாது. ஓகேனக்கல் விவகாரத்தை பொறுத்த வரையில் அந்த பகுதி எங்களுக்கே சொந்தம். ஓகேனக்கல் பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பலர் கன்னட மொழியைத்தான் பேசுகின்றனர்.
கர்நாடக அரசின் ரேஷன்கார்டுகளைத்தான் வைத்துள்ளனர். கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் கர்நாடக மாநிலத்துக்குத்தான் சொந்தம். இதில் எந்த பிரச்சனையும் இல்லை.
கர்நாடக மாநிலத்துக்குச் சொந்தமான இடத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications