அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு எதிராக அதிமுக போராட்டம்
நாகை: நாகையில் சப்- கலெக்டரை தாக்கிய வழக்கில் தமிழக அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி அரசு சார்பில் கலர் டிவி வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது விழாவில் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கும், சப்-கெலக்டர் ஜனார்த்தனனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது தன்னை ஜாதி பெயரை சொல்லி ஒருமையில் திட்டியதாக அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது சப்- கலெக்டர் ஜனார்த்தன் வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து தமிழக அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனால் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டம் நடத்த அதிமுகவினர் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து நாகர்கோவிலில் ஜெயலலிதா பேரவை செயலாளர் தளவாய் சுந்தரம் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.. வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
இனிதான் ஆரம்பம்.. விஜயபாஸ்கர் பலே திட்டம்.. வெளியான ஆடியோ -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக்












Click it and Unblock the Notifications