செம்மொழி: தெலுங்கு-கன்னட கமிட்டிக்கு எதிராக வழக்கு
சென்னை: தெலுங்கு, கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மத்திய கமிட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தரப்பட்டதையடுத்து கன்னடத்துக்கும் அந்த அந்தஸ்து தரப்பட வேண்டும் என கர்நாடகத்தில் போர்க் குரல் எழுந்துள்ளது. இதையடுத்து ஆந்திராவிலும் தெலுங்குக்கு செம்மொழி அந்தஸ்து கோரப்பட்டு வருகிறது.
இதையடுத்து இது குறித்து ஆராய இரு கமிட்டிகளை மத்திய அரசு நியமித்தது. அதில் கர்நாடகத்தைச் சேர்ந்த இருவரும், ஆந்திரத்தைச் சேர்ந்த இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் காந்தி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,
இந்த இரு மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்களில் மொழியியல் அறிஞர்கள் யாரும் இல்லை. வெறும் மொழிப் பற்று, பிறரது நெருக்குதல், மிரட்டல்கள் ஆகியவற்றுக்கு அடிபணியாமல் இவர்களால் சுயமாக முடிவெடுக்க முடியாது.
இந்த கமிட்டியில் உள்ளவர்களை வைத்துக் கொண்டு, உண்மையிலேயே இந்த இரு மொழிகளும் செம்மொழி அந்தஸ்துக்கு உரியவை தானா, செம்மொழி அந்தஸ்துக்கு உரிய எல்லா தகுதிகளும் அந்த மொழிகளில் உள்ளனவா என்பதை முறையாக ஆராய முடியாது.
தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் செம்மொழி அந்தஸ்து தருவது தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டிகளி்ல் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் சர்வதேச அளவில் உள்ள அங்கீகாரத்தின் அடிப்படையில் தான், அவற்றுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், தெலுங்கு-கன்னடத்துக்காக அமைக்கப்பட்ட கமிட்டிகளில் உள்ளவர்கள் ஆந்திரா, கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். செம்மொழி அந்தஸ்துக்கு பரிந்துரைக்க வேண்டும் என இவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். இதனால் செம்மொழி அந்தஸ்து தரலாம் என்பதைத் தவிர வேறு எதையும் இவர்களால் பரிந்துரைக்கவே முடியாது.
உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகளை இந்தக் கமிட்டிகளின் தலைவராக நியமித்தால் தான் அவை சுயமாக செயல்பட முடியும்.
எனவே இதில் நீதிமன்றம் தலையிட்டு முறையான அறிஞர்கள் கொண்ட கமிட்டிகளை அமைக்க வேண்டும். இப்போதுள்ள கமிட்டிகளின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசுக்கும் சாகித்ய அகாடமி அமைப்புக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் காந்தி.
இந்த மனு தலைமை நீதிபதி கங்கூலி, நீதிபதி இப்ராகிம் கலீபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், இது தொடர்பாக 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசின் வழக்கறிஞர் துணை சொலிசிட்டர் ஜெனரல் வில்சனுக்கும் உத்தரவிட்டனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications