சென்னையில் ஒரே மாதத்தில் 25 கொலைகள்- ஜெ
சென்னை: சென்னை நகரில் ஒரே மாதத்தில் 25க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் சென்னை நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை நகரின் மையப் பகுதிகளில் மர்மக் கொலைகள் தொடர்ந்து வருகின்றன. ஒரே மாதத்தில் 25க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் சென்னை நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
கொலைகளுக்கு காரணமானவர்களை காவல் துறையினர் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. குற்றவாளியைப் பார்த்ததாகக் கூறியவர்களை காவல் துறையினர் கைது செய்வதால், தற்போது காவல் துறைக்கு தகவல் கொடுப்பதற்குக் கூட பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்தப் பகுதிகளில் இரவுக் காவலாளிகளாக பணியாற்றியவர்கள், பயம் காரணமாக தங்கள் வேலைகளை ராஜினாமா செய்துள்ளனர். இரவு நேர காவலாளிகளாக வேலை பார்ப்பதற்கு ஆட்கள் கிடைக்காத நிலை உள்ளது.
காவல் துறையின் புலனாய்வில், குற்றவாளியைப் பற்றி இதுவரை எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. காவல்துறை என்ற ஒன்று தமிழகத்தில் இருக்கிறதா என்று பொதுமக்கள் சந்தேகப்படும் அளவுக்கு காவல் துறையின் போக்கு உள்ளது.
இதைப் பற்றியெல்லாம் முதல்வர் கருணாநிதி கவலைப்படாமல் உள்ளார்.
சென்னை நகரில் நிகழ்ந்து வரும் மர்மக் கொலைகளுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க முடியாத தமிழக அரசை கண்டித்து, நாளை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications