பெரம்பலூரிலும் சாப்ட்வேர் பார்க்-மத்திய அமைச்சர் ராஜா

பெரம்பலூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் சார்பில் வளர்ச்சி பணிகள் பற்றிய கண்காணிப்பு குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் சார்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. மேலும், சூரிய மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கான உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் பணிக்காக 2,700 ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தப்பட்டு அதற்கான பத்திர பதிவு முடிந்துள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலம், அரசு மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, பருத்தி ஆராய்ச்சி நிலையம், எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை ஆகியவற்றுக்கான பணிகள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.
ஜெயங்கொண்டம் அனல் மின் திட்த்திற்கு 8,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக மின் துறை அமைச்சர் தலைமையில், நெய்வேலி என்எல்சி அதிகாரிகள் மற்றும் மின் வாரிய அதிகாரிகளுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
நிலம் கொடுத்தோர் குடும்பங்களில் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை மற்றும் குடியிறுப்பு வசதிகள் செய்து தரப்படும். பிஎஸ்என்எல் துறையில் கிராமப்புற தரைவழி தொலைபேசி இணைப்புகளுக்கான உரிமைத் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications