பதவிக்கு ஆபத்து-முஷாரப் சீன பயணம் ரத்து

மேலும் தன்னால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 8 பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் மறுநியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
முஷாரப் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாகவும், முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மறு நியமனம் செய்வது தொடர்பாகவும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் சர்தாரி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவர் நவாஸ் ஷெரீப் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இப்போது ஷெரீப்பின் ஆதரவுடன் தான் சர்தாரியின் கட்சி ஆட்சியில் உள்ளது. முஷாரப் மீது நடவடிக்கை எடுப்பதில் சர்தாரி தயக்கம் காட்டி வந்ததால், ஆட்சியைக் கவிழ்ப்பதாக அறிவித்தார் ஷெரீப்.
இதையடுத்து ஷெரீபுடன் பேச்சுவார்த்தையில் இறங்கினார் சர்தாரி. பல சுற்றுகள நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் இன்று முஷாரப் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வருவது என இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
நாட்டில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தியது, ஜனநாயக அரசைக் கவிழ்த்தது, பிரதமரை சிறையில் அடைத்தது, ராணுவத்தை தனது கைப்பாவையாக பயன்படுத்தியது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நீக்கியது உள்பட 10 குற்றச்சாட்டுகள் கண்டனத் தீர்மானத்தில் அடங்கும் எனத் தெரிகிறது.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதிபர் பதவியிலிருந்து முஷாரப் இறங்க நேரிடும்.
இந் நிலையில் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க சீனா செல்ல இருந்த முஷாரப் தனது பயணத்தை ரத்து செய்விட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications