கபிணி அணை நிரம்பியது-மேட்டூருக்கு 56,000 கன அடி நீர் திறப்பு
வயநாடு: கேரளாவின் வயநாடு பகுதியில் கன மழை பெய்து வருவதால் கர்நாடகத்தின் கபிணி அணை நிரம்பி விட்டது. இதையடுத்து அணைக்கு வரும் 56 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திருப்பி விடப்படுகிறது.
தென் மேற்கு பருவ மழை சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வேகம் பிடித்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரளாவில் பருவ மழை கடந்த 10 நாட்ளாக விளாசிக் கொண்டிருக்கிறது.
கேரளாவின் வயநாடு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தின் கபிணி அணை நிரம்பி விட்டது. அணைக்கு தற்போது விநாடிக்கு 56 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இந்த உபரி நீர் அப்படியே தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திருப்பி விடப்படுகிறது. இந்த நீர் இன்னும் 2 நாட்களுக்குள் மேட்டூரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் எனத் தெரிகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 62.24 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 17 ஆயிரத்து 968 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
கர்நாடகத்தின் கே.ஆர்.எஸ். அணையும், ஹேமாவதி அணையும் வேகமாக நிரம்பி வருவதால்அங்கிருந்தும் மேட்டூருக்கு நிறைய நீர் திறந்து விடப்படும். எனவே விரைவில் மேட்டூர் அணைக்கு அபரிமிதமான நீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications