காரில் சுற்றிய 6 அகதிகள் கைது - புலிகளா?
சென்னை: சென்னையில் காரில் இரவில் சுற்றிய 6 இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக போலீஸார் தீவிர ரோந்து மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் சில விடுதலைப் புலிகள் சிக்கியுள்ளனர். முக்கிய பிரமுகரான தம்பி அண்ணன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று இரவு 6 இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, திருமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, வேகமாக வந்த ஒரு டாடா சுமோ காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அந்த காரில் 6 பேர் இருந்தனர்.
விசாரணையில், 6 பேரும் இலங்கை தமிழர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் செல்வம், பிரதீபம், அருள்தாஸ் ஆகிய 3 பேரும் புழலையடுத்த காவாங்கரை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
தினேஷ்குமார், சால் ஆகிய 2 பேர் செங்குன்றத்தையடுத்த வடகரை என்னும் இடத்தில் வசித்து வரும் தகவல் விசாரணையில் வெளியானது.
இவர்கள் 5 பேரும் அண்ணாநகர் பகுதியிலுள்ள திருமங்கலம் வசந்தம் காலனியில் வசிக்கும் தனுஷன் என்ற தங்களது நண்பரை அந்த காரில் அழைத்து கொண்டு வந்ததாக போலீசிடம் தெரிவித்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது அடிக்கடி இப்படி காரில் சுற்றுவது வழக்கம் என்று ெதரிவித்துள்ளனர். இருப்பினும் போலீஸார் காரை சோதனையிட்டதில் அதன் உள்ளே ஒரு நம்பர் பிளேட் கிடைத்தது.
தங்களது காரில் இருந்த நம்பர் பிளேட் பழையதாகி உரிந்துவிட்டதால் புதிய பிளேட்டை பொருத்த இதை எடுத்து செல்வதாக அவர்கள் கூறினார்கள். ஆனால் காருக்குள் கிடந்த நம்பர் பிளேட்டை சோதனையிட்டதில் அது வேறு வாகனத்தின் பதிவு எண் என்பது தெரிந்தது.
இதையடுத்து 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்த போலீஸார், யார் யாருடன் அவர்கள் தொடர்பு வைத்துள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
அகதிகள் முகாமிலிருந்து எப்படி இவர்கள் வெளியேறினர், இவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications