இலங்கையிலிருந்து விடுதலையான 5 மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்
ராமநாதபுரம்: கடந்த 2006ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, இந்திய கடலோரக் காவல் படையினரால் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டனர்.
கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி தங்கச்சி மடத்தைச் சேர்ந்த இந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. யாழ்ப்பாணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்திய அரசும், தமிழக அரசும் எடுத்த முயற்சியின் விளைவாக கிட்டத்தட்ட 30 மாதங்களுக்குப் பிறகு ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டனர்.
அனைத்து நடவடிக்கைகளும் முடிந்து நேற்று மாலை இவர்களை இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைத்தது.
இதையடுத்து கடலோரக் காவல் படை கப்பல் மூலம் மண்டபத்திற்கு ஐந்து பேரும் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications