சென்னை பள்ளி மாணவர்களுக்கும் இனி காப்பீடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீதிக்கு வீதி தனியார் பள்ளிகள் வந்துவிட்டன இன்றைக்கு.

பொதுவாக பள்ளி என்பது மாணவர்களுக்கு பாதுகாப்பான, காற்றோட்டமான இடத்தில் அமைய வேண்டும். ஆனால் நகரத்தின் பல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இப்படி இல்லை.

பல பள்ளிகள் அடுக்குமாடிக் கட்டங்களில், விளையாட்டு மைதானம் கூட இல்லாமல் இயங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தகைய கட்டிடங்களில் இடிதாங்கிக் கருவி கூடப் பொருத்தப்படாமல் உள்ளதாம். விதிமுறைகள் சரிவரப் பின்பற்றப்படாததால்தான் பள்ளிக் குழந்தைகள் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர் என கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

இதன் விளைவு, இனி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கற்கும் மாணவ-மாணவிகளுக்கு காப்பீடு செய்யும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அதோடு அறக்கட்டளை பெயர்களில் பள்ளிகள் நடத்தக் கூடாது. பள்ளியின் சொத்துக்களை நிர்வாகியின் பெயரில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பின்பற்றாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது, வழங்கிய அதிகாரத்தையும் ரத்து செய்யத் தயங்க மாட்டோம் என்றும் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+