சென்னையை தகர்க்கும் சதி திட்டத்தில் பெண்கள்?

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தீவிரவாதி ஹீராவின் வீட்டில் நடத்திய சோதனையில் பிடிபட்ட டைரியில் ஒரு பெண்ணின் செல்போன் எண் சிக்கியுள்ளது. இதையடுத்து சதித் திட்டத்தில் பெண்களுக்கும் தொடர்பு உள்ளதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர். ஹீராவின் வீட்டில் தொடர்ந்து 3வது நாளாக சோதனை நடைபெற்றது.

சென்னை மற்றும் நெல்லையில் சுதந்திர தினத்தன்று வெடிகுண்டு வைக்க சதி திட்டம் தீட்டியதாக ஹீரா, அலி அப்துல்லா, அப்துல் காதர் ஆகியோரை போலீசார் கைது செய்து பாளை ஆயுதபடை மைதானத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திநகர் ரங்கநாதன் சாலையில் அப்துல் காதர் தங்கியிருந்த வீடு, மண்ணடியில் உள்ள ஹீராவின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் டைரியை கைப்பற்றினர்.

மேலும் பேட்டையில் உள்ள அப்துல் காபூரின் வீட்டிலும் சோதனை நடந்தது. அங்கிருந்த கைப்பற்றிய டைரியில் இறைவன் ஒருவனே என்ற அமைப்பின் தலைவர் தவ்பீக்கின் பெயர், திருவனந்தபுரத்தில் உள்ள அவர் தங்கியிருந்த இடத்தின் முகவரி மற்றும் செல் நம்பர் ஆகியவை இருந்தது. அந்த டைரியில் ஒரு பெண்ணின் முகவரியும், அவரது செல் நம்பரும் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து அந்த அமைப்பில் பெண்களும் இடம் பெற்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் அந்த பெண்ணின் பெயர், செல் நம்பரை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

மேலும் சுதந்திர தினத்தன்று பெண்களை பயன்படுத்தி சதி திட்டத்தை நிறைவேற்ற தீவிரவாதிகள் திட்டமிட்டுருக்கலாம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக தீவிரவாதிகள் இந்த புதிய யுக்தியை கையாளலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+