குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம்-நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி: குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர் முத்தையா. இவரின் மனைவி அன்னலட்சுமி. இவர்களது மகள் கார்த்திகா. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். மகள் கார்த்திகாவுடன் தனியே வசித்து வருகிறார் அன்னலட்சுமி.
குடும்பச் செலவுக்கு முத்தையா பணம் கொடுக்காமல் இருந்தார். இதனால் அன்னலட்சுமி கஷ்டபட்டு வந்தார். தூத்துக்குடி முதலாம் நடுவர் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2007ல் அன்னலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஏமந்த்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி தனது உத்தரவில், பாதிக்கப்பட்ட அன்னலட்சுமிக்கு மாதந்தோறும் ரூ.3,500ஐ ஜீவனாம்சமாக அவரது கணவர் முத்தையா வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.
குற்றவியல் நடைமுறைச் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடரப்படுவதுதான் நடைமுறையில் உள்ளது. இதில் கால விரையமும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் உரிய காலத்தில் இழப்பீடும் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.
குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாத்தல் சட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முதலாக இந்த வழக்கு தொடரப்பட்டது. வழக்கும் விரைவில் முடிந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications