அரியலூர் வன்னியர் சங்கத் தலைவர் திடீர் நீக்கம்
அரியலூர்: அரியலூர் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் கொளஞ்சி அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் பதவியில் இருந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி சுகுணா, ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் கொளஞ்சிக்கும், இந்திரா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு உள்ளது. இதனால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் கோபித்துக் கொண்டு என் தாய் வீட்டிற்கு வந்து விட்டேன்.
பின்னர் மீண்டும் என் கணவரின் வீட்டிற்கு திரும்பி சென்றேன். அப்போது எனது மாமனார் வைத்தியலிங்கம், மாமியார் சுகிர்தம், கணவரின் சகோதரர் மணி ஆகியோர் என்னை வீட்டிற்குள் விடாமல் தடுத்தனர். மீறி உள்ளே வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர் என்று புகாரில் கூறியிருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அரியலூர் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் கொளஞ்சி அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications