தீவிரவாதிகளின் போனில் பாளை. முக்கிய பிரமுகரின் எண்!
நெல்லை: நெல்லை தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில், பாளையங்கோட்டையச் சேர்ந்த முக்கியப் பிரமுகரின் எண் இருப்பதாக கூறப்படுகிறது.
சுதந்திர தினத்தின் போது குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியதாக நெல்லை பேட்டையை சேர்ந்த சேக் அப்துல் கபூர், ஹீரா, புழல் சிறையிலிருந்த அலி அப்துல்லா ஆதியோரை போலீசார் கைது செய்தனர்.
ஹீரா, கபூர் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 3 செல்போன்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த செல்போன்களில் தீவிரவாதி தவ்பீக் மற்றும் ஒரு பெண்ணின் செல்போன் நம்பர் உள்ளிட்ட பல்வேறு எண்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் மற்றொரு அமைப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் நம்பர்களும் இதில் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக பாளையை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகரின் நம்பரும் பதிவாகி உள்ளது. இது தவிர கேரளாவை சேர்ந்த வேறு சில அமைப்பின் தலைவர்களின் நம்பர்களும் இதில் இடம் பெற்றுள்ளது. இவர்கள் தீவிரவாதிகளுக்கு தேவையான பண உதவிகளை செய்திருக்கலாம் என தெரிகிறது.
இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தினால் தலைமறைவாக உள்ள தீவிரவாதி தவ்பீக் குறித்து தகவல்கள் தெரிய வரும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
செல்போன் வாங்கிய வடமாநில மர்ம நபர்கள்:
இதற்கிடையே, தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு செல்போன் கடையில் காலை வந்த வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் தங்களுக்கு புதிய செல்போன் வேண்டும் என்று கேட்டனர்.
அவர்களது நடவடிக்கையில் கடைகாரருககு சந்தேகம் வந்தது. இதுகுறித்து போலீசில் தெரிவிக்க முடிவு செய்த கடைக்காரர் அவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த நபர்கள் சிக்கிரம் செல்போன் தரும்படி நச்சரித்து ரூ.3000 மதிப்புள்ள செல்போனை வாங்கிச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து கடைக்காரர் எஸ்பி ஆபிசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு வருவதற்குள் அந்த நபர்கள் மாயமாகி விட்டனர்.
செல்போன் வாங்கி சென்ற நபர்கள் தீவிரவாதிகளா அல்லது கடையை நோட்டமிட வந்த செல்போன் கொள்ளையர்களா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications