பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: பலி 13ஆக உயர்வு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் விமான படைக்கு சொந்தமான பேருந்தில் இருந்த பயணிகள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாண தலைநகரான பெஷாவரில் விமானப் படைக்குச் சொந்தமான பேருந்து புறப்பட்டது. அங்குள்ள பாலத்தைக் கடந்தபோது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து காரில் இருந்து திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் பஸ்சில் இருந்த விமானப் படை ஊழியர்கள் 4 பேர், சாலையில் சென்றவர்கள் மற்றும் 4 வயது குழந்தை உள்பட 12 பேர் பரிதாபமாக உயரிழிந்ததாக தகவல் வெளியானது. தற்போது பலி எண்ணிக்கை 13ஆக உயர்நதுள்ளது.
இந்த தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
--------
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications