விமானத்தில் சில்மிஷம் - ஜோசப் வழக்கில் செப். 16 முதல் விசாரணை

கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையிலிருந்து கொச்சிக்கு கிங்பிஷர் விமானம் மூலம் சென்றார் லட்சுமி கோபகுமார். அப்போது அவரது இருக்கைக்குப் பின் இருக்கையில், பி.ஜே.ஜோசப் அமர்ந்திருந்தார். விமானம் பறக்கத் தொடங்கிய பின்னர் லட்சுமி கோபகுமாரின் இடுப்பைப் பிடித்து ஜோசப் கிள்ளி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமி கோபகுமார் மீனம்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் ஜோசப் மீது புகார் பதிவு செய்து ஆலந்தூர் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த 2 ஆண்டுளாக நடந்து வரும் இந்த வழக்கில், செப்டம்பர் 16ம் தேதி முதல் விசாரணைகள் தொடங்கவுள்ளன என்று நீதிபதி ராமநாதன் அறிவித்துள்ளார்.
வழக்கில் சாட்சி சொல்ல வருமாறு லட்சுமி கோபகுமார் உள்ளிட்ட நான்கு சாட்சியங்களுக்கும் அவர் சம்மன் அனுப்பியுள்ளார். லட்சுமி கோபகுமார் தவிர அவரது கணவர் கோபகுமார், விமான கமாண்டர் ஷாஜி மகாதேவன், கேப்டன் சாமுவேல் கோகலே ஆகியோரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் குறித்து ஐ.ஜி. சந்தியா மூலம் நடத்திய விசாரணையின் அறிக்கையையை தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கும் நீதிபதி ராமநாதன் உத்தரவிட்டார்.
-
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்











Click it and Unblock the Notifications