'அமர்நாத்': ஸ்ரீநகரில் இன்றும் துப்பாக்கிச் சூடு-பலி 22 ஆனது
ஸ்ரீநகர்: அமர்நாத் நில விவகாரத்தில் காஷ்மீரில் தொடர்ந்து வன்முறையும் கலவரமும் நடந்து வருகிறது.
ஸ்ரீநகரில் இன்று காலை நடந்த கலவரத்தை அடக்க மத்திய ரிசர்வ் போலீ்ஸ் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சபாகாடல் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் இன்றும் ஒருவர் பலியானார். மேலும் இருவர் காயமடைந்தனர்.
அமர்நாத் நில விவகாரம் தொடர்பாக காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது. கோவிலுக்கு ஆதரவாக போராடி வருபவர்கள் காஷ்மீரில் உள்ள நெடுஞ்சாலைகளை தடை செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பலியாயினர்.
இதற்கிடையே நிலம் தருவதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்து வருகி்ன்றன. இவர்களைத் தடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் ஷேக் அப்துல் அஜீஸ் உள்பட 6 பேர் இறந்தனர்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 13 ஆண்டுகளில் காஷ்மீ்ர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந் நிலையில் இன்று ஸ்ரீநகர் உள்பட 5 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அப்போது மீண்டும் கலவரம் வெடிக்கவே மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒருவர் பலியாகியுள்ளார்.
இதன்மூலம் இந்த விவகாரத்தை வைத்து நடந்த கலவரம், துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
சிஆர்பிஎப் ஐஜி இடமாற்றம்:
இந் நிலையில் காஷ்மீர் மாநில மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஐஜி டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐஜி பொறுப்பு துணை ஐஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தொடர் துப்பாக்கிச் சூடுகளையடுத்து மத்திய அரசு இன்று இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications